டெல்லி:டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்றும். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது. எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு (FIR) செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா.எம்.திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பதியப்படும் வழக்குகள் பொது நலம் சார்ந்தவை இல்லை. விளம்பரத்திற்காக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.