டெல்லி:காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை இன்று (நவ.1) விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து, பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கியது.