டெல்லி: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராக மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடவும் மற்றும் இனி வரும் காலங்களில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின், பீட்டர் அல்போனஸ், ஆ.ராசா மற்றும் திருமாவளவன் ஆகியார் பேச இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெகநாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 விதிகளை மீறுவதாக உள்ளது. மேலும், ஹிஜாப் வழக்கை போல் சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிகளில் எந்த கூட்டமும் நடத்தக் கூடாது எனவும், சனாதன தர்மம் என்ற தலைப்பில் மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது எப்படி என்றும், அதற்கு காரணமான குற்றவாளிகள் மற்றும் அமைப்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தமிழ்நாடு காவல் துறை தலைவர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!