டெல்லி:இந்துக்கள் மற்றும் ஜெயினர்கள், தங்களது மதக் கோயில்களை தாங்களே நிர்வகிக்க உரிமை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசுகள் நிர்வகிக்கும் கோயில்களில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பினர்.
கோயில்களில் நிதி முறைகேடு.. மனுவில் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன.. ஆதாரங்கள் இல்லை.. - இந்துக்கள் மற்றும் ஜெயினர்களின் கோயில்கள்
மாநில அரசுகள் நிர்வகிக்கும் கோயில்களில் நிதி முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
SC
கர்நாடகாவில் பதினைந்தாயிரம் கோயில்கள் மூடப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் என்றும் தெரிவித்தனர். இந்த மனுவில் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன, உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என தெரிவித்தனர்.