தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - ஒன்றிய அரசு

புது டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த பொது நல மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

By

Published : Sep 20, 2021, 6:47 PM IST

இவாரா தொண்டு நிறுவனம் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவில் கூறியிருந்ததாவது, “இந்திய மருத்துவ கூட்டமைப்பானது வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தால்தான் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.

இத்தகைய முயற்சியை கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் முன்னெடுத்தன. இத்தகைய முயற்சியை போல் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். அவர்களுக்கு மட்டும் உதவும் வகையில் கோவின் தளத்தில் உதவி எண்கள் வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டத்தைக் கடைப்பிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும்

இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் D.Y. சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஒன்றிய அர்சு சார்பாக துஷார் மேத்தா ஆஜரானார்.

அதில் நீதிபதிகள் துஷார் மேத்தாவிடம், “மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து இரு வாரங்களில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details