டெல்லி:புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் துயரங்கள் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் பி.வி. நாகரதா ஆகியோரது அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்த விசாரணையில் இன்று (ஜூலை 21) நீதிபதிகள், நாடு முழுவதும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி உணவு பொருள்கள் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல நாடு முழுவதும் 27 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 15 கோடி கார்டுகளுக்கு மட்டுமே முழுமையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 12 கோடி கார்டுகளுக்கு முழுவதும் வழங்கப்படுவதில்லை. இதனை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. நமது நாட்டில் எல்லா வளர்ச்சிகளும் இருந்தும் குடிமக்கள் பசியால் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.