தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரை விமர்சித்தப் பத்திரிகையாளர் மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி! - பிரதமர் மோடி குறித்து ஊடகவியலாளர் வினோத் துவா

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமான கருத்துகளைத் தெரிவித்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Supreme Court
Supreme Court

By

Published : Jun 3, 2021, 3:39 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை மூத்தப் பத்திரிகையாளர் வினோத் துவா, தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுவந்தார். இதைத்தொடர்ந்து, வினோத் துவா(வயது 67) மீது தேச துரோக நடவடிக்கை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்தார்.

தேச துரோக வழக்கு தள்ளுபடி

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யூ யூ லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று (ஜூன்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையைப் பறிக்கும் விதமாகவுள்ளது. கேதர் நாத் சிங் தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஊடகவியலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தீர்ப்பளித்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

யார் இந்த வினோத் துவா

நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான வினோத் துவா, தூர்தர்ஷன், என்டிடிவி, தி வயர் போன்ற முன்னணி ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். வினோத் துவா, ராம்நாத் கோயங்கா விருது, பத்ம ஸ்ரீ விருது, ரெட் இன்க் போன்ற முன்னணி விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அருண் மிஸ்ரா நியமனம்: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு!

ABOUT THE AUTHOR

...view details