தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கருக்கலைப்பு வழக்கில் குஜராத் நீதிமன்றம் தாமதம்.. உச்ச நீதிமன்றம் அதிருப்தி! - உச்ச நீதிமன்றம்

SC displeased over Gujarat HC adjourning: கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 5:33 PM IST

டெல்லி: குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒருவர் உடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். இதனால் கர்ப்பமும் அடைந்து உள்ளார். ஆனால், இதற்குப் பிறகே தான் பழகிய நபருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்து உள்ளது. எனவே, தனது கருவை கலைப்பது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பெண் கடந்த ஆகஸ்ட் 7 அன்று வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு அதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 8) அன்று விசாரணைக்கு வந்து உள்ளது.

அப்போது, இதில் மனுதாரரின் உடல் நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மருத்துவ வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து, ஆகஸ்ட் 11 அன்று மனுதாரரின் மருத்துவ அறிக்கையை மருத்துவ கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளார். இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு (அதாவது ஆகஸ்ட் 23க்கு) இந்த வழக்கை ஒத்தி வைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு நாடியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகரத்னா, “மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அனுகிய நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. மனுதாரர் ஏற்கனவே 26 வார கர்ப்பமாக இருந்தார்.

ஆகஸ்ட் 11-இல் இருந்து இன்று வரை மதிப்புமிக்க நேரங்களை இழந்து உள்ளோம். 12 மதிப்புமிக்க நாட்களையும் இழந்து விட்டோம். வழக்கின் அவசர நிலைய நாம் உணர வேண்டும். இந்த உத்தரவிற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும், தற்போது மனுதாரர் 27 வாரங்கள் மற்றும் 2 நாட்கள் கர்ப்பமாக இருக்கிறார். மிக விரைவில் அவர் 28 வாரங்களை நெருங்க உள்ளார்” என தெரிவித்தார். அப்போது, புதிய மருத்துவ அறிக்கையை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் மனுதாரரின் மருத்துவ அறிக்கையை குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள கேம்சிஆர்ஐ மருத்துவமனை நாளை (ஆகஸ்ட் 20) மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை குஜராத் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாதி கிலிடியால் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:டிஜிட்டல் இந்தியா திட்டமே, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான முதல்படி - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details