தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு - ஆர்பிஐ, சிபிஐக்கு நோட்டீஸ்!

வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் ரிசர்வ் வங்கி நியமன இயக்குநரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SC
SC

By

Published : Oct 17, 2022, 4:43 PM IST

Updated : Oct 17, 2022, 8:49 PM IST

டெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "வங்கிக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குனருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், வங்கிக்கடன் மோசடிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி நியமன இயக்குனரிடம் விசாரணை நடத்தப்படுவதில்லை.

நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய பிஎன்பி வங்கி மோசடி, விஜய் மல்லையா சம்மந்தப்பட்ட வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட முக்கிய வழக்குகளிலும், ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநரிடம் சிபிஐ விசாரணை நடத்தவில்லை. அவரை விசாரிக்க கூடாது என எந்த விதிமுறையும் இல்லை.

அதனால், இதுபோன்ற கடன் மோசடி வழக்குகளில், கடன் வழங்கும் செயல்முறையில் தொடர்புடைய அனைவரையும் சேர்க்க வேண்டும். உண்மையில் நியமன இயக்குனர் குற்றமற்றவர் என்றால், அது விசாரணையில் தெரிந்துவிடும். ஆனால், அவரை விசாரிக்கவில்லை என்பதுதான் உண்மை. இது விதிமீறல்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று(அக்.17) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமனை மீம் போட்டு கலாய்த்த சுப்பிரமணியன்சாமி!

Last Updated : Oct 17, 2022, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details