டெல்லி: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியில் இருந்தபோது பல ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக டி-நோட்டிஃபிகேஷன் செய்ததாக அவர் மீது ஊழல் வழக்குப்போடப்பட்டது. ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) ஒப்பந்தத்தை வழங்குவதற்குகாக ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் குற்றசாட்டின்கீழ் உள்ள அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்தது. இந்த உத்தரவை எதிர்த்து பி.எஸ். எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (செப்-23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.