தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19இல் உச்ச நீதிமன்ற தலையீடு தவறானது - காங்கிரஸ் விமர்சனம் - கோவிட்-19இல் உச்ச நீதிமன்ற தலையீடு

கோவிட்-19 தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்வதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Abhishek Manu Singhvi
Abhishek Manu Singhvi

By

Published : Apr 23, 2021, 5:20 PM IST

நாட்டின் கோவிட்-19 நிலவரம் தொடர்பான முக்கிய உயர் நீதிமன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது. இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது, "இந்த சிக்கலான சூழலில் உச்ச நீதிமன்ற தலையீடு என்பது தேவையற்ற ஒன்றாகும். இது முற்றிலும் தவறானது.

நாட்டின் பண்முகத் தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உயர் நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொண்டுவரும் சூழலில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிடத் தேவையில்லை" என்றார்.

மேலும், "இந்தியா தட்டுப்பாட்டை சந்தித்துவரும் நிலையில், கள நிலவரத்தை உணராமல் மத்திய அரசு கடந்த சில மாதங்களில் மட்டும் 6.5 கோடி தடுப்பூசிகள், 11 லட்சம் மருந்துகள், இரண்டு கோடி பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது" என மத்திய அரசையும் சிங்வி விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவிட்-19 தொடர்பான வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details