டெல்லி : உத்தரப் பிரதேச எம்பியும், சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவருமான ஆசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா கான் ஆகியோருக்கு குற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சமாஜ்வாதி மூத்தத் தலைவரும், உத்தரப் பிரதேசம் ராம்பூர் மக்களவை தொகுதி எம்பியுமான ஆசம் கான் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் பதிவாயிருந்தன.
இந்த வழக்குகளில் அவரை கைதுசெய்த போலீசார் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சீதாபூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆசம் கான் பிணை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கும் அவரது மகனும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க :அதிருப்தியில் ஆசம்கான்: கை கொடுக்கும் காங்கிரஸ்