தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் 'சரவெடிக்குத் தடை' - உச்ச நீதிமன்றம் அதிரடி - சரவெடி வெடிக்க தடை

சரவெடி வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

firecrackers
firecrackers

By

Published : Oct 29, 2021, 10:29 PM IST

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம் ஆர் ஷா, ஏ ஸ் போபாபன்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனவும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பட்டாசுகள் சந்தையில் கிடைப்பது வருத்தமளிக்கிறது என்றனர்.

காற்று மாசு காரணமாக டெல்லி பெரும் பாதிப்பை சந்திக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே ஏற்கனவே உள்ள உத்தரவின்படி, பேரியம் நைட்ரேட்’ ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை என்பதை முறையாக அமல்படுத்த வேண்டும்.

இவற்றை விற்கவோ, உற்பத்தி செய்யவோ, வெடிக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:யோகி அரசை கண்டித்த பாஜக எம்பி வருண் காந்தி

ABOUT THE AUTHOR

...view details