டெல்லி:தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) அறிமுகப்படுத்த வழிவகுத்த, மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951ன் 61ஏ பிரிவை எதிர்த்து, வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
EVM பயன்பாட்டை அனுமதித்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதித்த 61ஏ சட்டப் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
SC
குறிப்பிட்ட இந்த சட்டப்பிரிவு 61ஏ, மக்களவை அல்லது மாநிலங்களவை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவில்லை என்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951ன் 61ஏ பிரிவை ரத்து செய்ய முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய இளைஞன் - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு