தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம் - பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த முடியாது

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டாலும், மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Sep 20, 2021, 5:09 PM IST

டெல்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மூடப்பட்டன. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்துவருவதால், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் தலையிட முடியாது

இந்த மனு டி.ஒய். சந்திரசூட் அமர்வின் முன் இன்று (செப். 20) விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகையில் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு ஆணையிட முடியாது என்றும் கூறினார்.

மேலும், பள்ளிகள் திறப்பது அரசு எடுக்க வேண்டிய முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அதிர்ந்து போன அதிகாரிகள்: ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details