தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னை உள்பட 7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - கொலிஜியம் பரிந்துரை... - sc collegium

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா உள்ளிட்ட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : Nov 25, 2022, 9:19 AM IST

Updated : Nov 25, 2022, 2:25 PM IST

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 4 மூத்த நீதிபதிகளை கொண்ட குழு உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்பட 2 நீதிபதிகள் என மொத்தம் 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நவம்பர் 24ஆம் தேதி நடந்த கொலீஜியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி டி. நாகார்ஜுன் மற்றும் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பட்டூ தேவானந் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி நிகில் எஸ். கேரியலை பாட்னா உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முன்மொழிவுக்கு குஜராத் உயா் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பணியிடமாற்ற நீதிபதிகளின் பட்டியலில் இருந்து நீதிபதி நிகில் எஸ்.கேரியலின் பெயா் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க:உத்தரப்பிரதேசம்: மாணவன் சுட்டுக் கொலை!

Last Updated : Nov 25, 2022, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details