தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

SC Collegium Recommended: சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற கொலீஜியம் பரிந்துரை
sc-collegium-recommends-five-additional-judges-as-permanent-judges-of-madras-hc

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 3:23 PM IST

Updated : Sep 1, 2023, 5:01 PM IST

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (ஆகஸ்ட் 31) பரிந்துரை செய்துள்ளது. கொலிஜியம் தலைவர் மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், நீதிபதி நிடுமோலு மாலா, நீதிபதி எஸ்.சௌந்தர், நீதிபதி சுந்தர் மோகன் மற்றும் நீதிபதி கபாலி குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்றக் கோரி, மேற்கண்ட பரிந்துரையை தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு ஆளுநரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதியை கண்டறியும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் செயல்பாடுகளை அறிந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது.

2017 அக்டோபர் 26ஆம் தேதியிட்ட தீர்மானத்தின்படி, கொலீஜியத்தின் தலைவர் இந்திய தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளதுபடி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள ஜந்து கூடுதல் நீதிபதிகளின் தகுதி மற்றும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, சென்னை நீதிமன்ற பதிவேட்டில் உள்ளவற்றை ஆய்வு செய்து, அனைத்து விதமான அம்சங்களையும் பரிசீலித்து, இவர்கள் தகுதியானவர்கள் மற்றும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு ஏற்றவர்கள் என பரித்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், கா்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஆனந்த் ராமநாத் ஹெக்டே, கண்ணன்குழில் ஸ்ரீதரன் ஹேமலேகா ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதே போன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சித்தய்யா ராசய்யாவை நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்வதற்குப் பதிலாக, வருகிற நவம்பர் 8ஆம் தேதி முதல் மேலும் ஒரு வருடத்திற்கு கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த பரிந்துரைகள் அனைத்தும் சட்ட ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அனைத்து நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Last Updated : Sep 1, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details