தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதிச் செயலை நிராகரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

டெல்லி: ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதிச் செயல்களுக்கான சாத்தியக் கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கை முடித்துவைத்துள்ளது.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

By

Published : Feb 18, 2021, 3:23 PM IST

ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது, நீதிமன்றத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு புகார் சுமத்தினார். இதனைத் தொடர்ந்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்ததை தொடர்ந்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கோகாய்க்கு எதிரான புகார்களில் ஏதேனும் சதி செயல் உண்டா என்ற நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ரஞ்சன் கோகாயக்கு எதிரான சதிச் செயல்களுக்கான சாத்தியக் கூறுகளை நிராகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த அவரின் பார்வை, உச்ச நீதிமன்ற பதிவேட்டை நெறிப்படுத்தவதில் அவர் மேற்கொண்ட முயற்சி ஆகியவற்றின் காரணமாக சதிச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்கின் அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சதிச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பது தெரியவருகிறது. அதனை நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்கான மின்னணு ஆதாரங்களை விசாரணை ஆணையத்தால் சேகரிக்க முடியவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது தொடர்பான முறையை நெறிப்படுத்த கோகாய் சில கடுமையான நிர்வாக முடிவுகள் எடுத்திருப்பது தெரியவருகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான கோகாயின் முடிவுகளால் சிலர் வருத்தமாக இருந்தனர்" என தெரிவித்தது. அதுமட்டுமின்றி, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details