தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2021, 8:02 PM IST

ETV Bharat / bharat

சித்திக் கப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

உபா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சித்திக் கப்பானின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவருக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சித்திக் கப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
சித்திக் கப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி:உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்ற ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்மையில் கழிவறையில் வழுக்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவமனைக் கட்டிலில் அவர் விலங்கிட்ட நிலையில் வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது எதிர்தரப்பு குற்றச்சாட்டை அரசு வழக்கறிஞர் மறுத்தார். இதைத்தொடர்ந்து சித்திக் கப்பானின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சித்திக் கப்பானின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்லலாம் என்றும் அவர் குணமடைந்த பின்னர் உத்தரப்பிரதேச மதுரா சிறையில் அடைக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details