டெல்லி : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஜூலை 28ஆம் தேதி ஆட்டோ மோதி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ, உளவுபிரிவு காவலர்கள், மாநில காவலர்கள் என யாரும் நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என கூறியிருந்தது.
நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க யாருமில்லை- உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து மாநில காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதையடுத்து வழக்கில் ஆட்டோ ஒட்டுநர் உள்பட இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கின் தீவிரம் கருதி மாநில அரசு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, வினீத் சரண் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
அப்போது நீதிபதிகள், “ஜூலை 28 ஆம் தேதி கூடுதல் அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) வாராந்திர முன்னேற்றத்தை ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பாக இன்னமும் உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரத்தில் மாநில உயர் நீதிமன்றம் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : தன்பாத் நீதிபதி கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது - ஷாக்கிங் சிசிடிவி