முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் கலந்தாய்வு இன்று (அக்.25) தொடங்கவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அது தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டிலிருந்து முதுகலை மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவுக்கு 27 விழுக்காடும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. நீதிபதி சந்தரசூட், நீதிபதி நகரத்னா ஆகியோர் அமர்வு விசாரித்துவருகிறது. வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நடப்பாண்டுக்கான கலந்தாய்வு நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்றம் அனுமதி தரும் வரை கலந்தாய்வை தொடங்க மாட்டோம் என நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க:போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் முக்கிய மாற்றம் - அரசு பரிந்துரை