டெல்லி:இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் தேர்தலுக்காக முன்னாள் நீதிபதி எல்.என். ராவ் தலைமையிலான கமிட்டி அளித்த புதிய கால அட்டவணையை உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அசோசியேஷனுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், அசோசியேஷன் உறுப்பினர்களிடையே திருத்தப்பட்ட சட்ட விதிமுறையை வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற டிச.10ஆம் தேதி அசோசியேசன் உறுப்பினர்களிடையே நடக்கவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் இந்த விதிமுறைகள் அனைவரிடத்தும் வழங்கப்படுமெனத் தெரிகிறது.
மேலும், இத்தகைய சட்டவிதியை வடித்த முன்னாள் நீதிபதி ராவிற்கு 20 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாட்டிலுள்ள பிற நீதிமன்றங்கள் எவையும் இந்த சட்ட வரைவு குறித்தோ இந்தத் தேர்தல் கோரிக்கை மனுக்களை ஏற்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் கமிட்டி தேர்தல் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் போர்டு கூட்டம் நடைபெறவிருந்ததால் இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மகன் கொலை... தாய் கைது..