தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலின பாகுபாடு கூடாது- தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி! - National Defence Academy exams

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பெண்களுக்கு அனுமதி
பெண்களுக்கு அனுமதி

By

Published : Aug 18, 2021, 4:31 PM IST

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர யுபிஎஸ்சியால் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் நடத்தப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி ஆகும். நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால், இந்தத் தேர்வில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பாலின பாகுபாடு காட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்துவந்தது.

இந்நிலையில், குஷ் கல்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று (ஆக.18) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா, " தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் எவ்வித பாலின வேறுபாடும் பார்ப்பது கிடையாது. இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கொள்கை முடிவாகும்" என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்திய ராணுவத்தில் ஏன் 'இருபாலர் கல்வி' ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படாது. ராணுவம் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இத்தகைய விவகாரங்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்க எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். செப்டம்பர் 5இல் நடைபெறும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details