டெல்லி:அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே பல முறை ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 2) நடக்கவிருந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் அதிகமாக உள்ளதால், கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் வழக்கு விசாரணை டிசம்பர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.