தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேரு உயிரியல் பூங்காவில் 15 புலிகளைத் தத்தெடுத்த எஸ்பிஐ வங்கி! - புலிகளைத் தத்தெடுத்த எஸ்பிஐ

ஹைதராபாத்: நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 15 புலிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு ஆண்டுக்கு தத்தெடுத்துள்ளது.

SBI ADOPTED 15 TIGERS
புலிகளைத் தத்தெடுத்த எஸ்பிஐ

By

Published : Nov 14, 2020, 8:07 AM IST

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள நேரு உயிரியல் பூங்காவில் இருக்கும் 15 புலிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தத்தெடுத்துள்ளது. புலிகளை பராமரிக்கப்பதற்காக, வங்கியின் தலைமை பொது மேலாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா 15 லட்சத்திற்கான காசோலையை, நேற்று (நவ.13) முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆர்.ஷோபாவிடம் வழங்கினார்.

இந்தத் தத்தெடுப்பு திட்டம் வன விலங்குகளுக்கான ஆதரவையும், பராமரிப்பையும் வழங்குவதற்கானது எனத் தெரிவித்த ஓம் பிரகாஷ் மிஸ்ரா, நேரு விலங்கியல் பூங்காவின் புலிகளைப் பாதுகாப்பதில் எஸ்பிஐ வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து, அவர் பூங்காவில் உள்ள குள்ளநரிக்குட்டிகளை பொதுமக்களின் பார்வைக்காக கொடியசைத்து திறந்து வைத்தார்.

கரோனா பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலக்கட்டத்தில் பிறந்த இக்குட்டிகளுக்கு தற்போதைய வயது 8 மாதங்களாகும். இந்நிகழ்வின்போது, பூங்காவின் இயக்குநரும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான டி.எஸ், பூங்காவின் கண்காணிப்பாளர் ஷிடிஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ஆசியாவின் மிகப்பெரிய ஹைதராபாத் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details