PM Modi Stuck on Flyover: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 5) பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க இருந்தார்.
முதலில் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் வாயிலாக கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் மோடி சாலை மார்க்கமாக சென்றார்.
அப்போது பிரதமர் மோடி செல்லும் பாதையில் போராட்டக்காரர்கள் சாலை மறியியல் ஈடுபட்டனர். இதனால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன பாதுகாப்பு வளைய கான்வாய் 20 நிமிடங்கள் நின்றன.
இதன்காரணமாக, பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி மீண்டும் பலத்த பாதுகாப்புடன் பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்ததாகக் கூறிய பிரதமர் மோடி பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி நன்றி மேலும் இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
இதையும் படிங்க:பிரதமரின் பஞ்சாப் பயணம் மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் ரத்து!