தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருச்சூர் பூரம் திருவிழா; சாவர்க்கர் படத்தால் புதிய சர்ச்சை!

திருச்சூர் பூரம் திருவிழாவில் சாவர்க்கர் படம் இடம்பெற்றதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

Thrissur Pooram
Thrissur Pooram

By

Published : May 9, 2022, 12:22 PM IST

திருச்சூர் (கேரளம்): உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் அமைப்பாளர்களில் முக்கியமான குழுவான பரமேக்காவு தேவஸ்வம், பூரம் திருவிழா குடையில் இந்துத்துவ தலைவரான வீரசாவர்க்கரின் உருவப் படத்தை வைத்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கோவில் நிர்வாகம் நிழற்குடையை காட்சிப்படுத்துவதைத் திரும்பப் பெற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, மகாத்மா காந்தி, பகத் சிங் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற முக்கிய தலைவர்கள் உள்பட பல்வேறு மறுமலர்ச்சி மற்றும் சுதந்திர இயக்கத் தலைவர்களைக் கொண்ட குடைகளில் சாவர்க்கரின் உருவமும் உள்ளது.

அரசியலாக்க விரும்பவில்லை: இந்த நிலையில் பரமேக்காவு தேவஸ்வம் செயலர் ராஜேஸ், “மத நல்லிணக்கம் மற்றும் பூரத்தை பாதிக்கும் வகையில் எதையும் செய்ய மாட்டோம். சர்வதேச அளவில் நடக்கும் திருச்சூர் பூரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பூரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்றார்.

இருப்பினும், வீரசாவர்க்கர் படம் இடம்பெற்றுள்ள குடையை திரும்ப பெறுவதா என்பது குறித்து அவர் எந்தக் கருத்தையும் பதிவிடவில்லை. கோவில் திருவிழாவின் போது பா.ஜ.க தலைவரும் நடிகருமான சுரேஷ் கோபியால் திறந்து வைக்கப்பட்ட பரமேக்காவு தேவஸ்வத்தின் "சமயம்" கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த குடைகள் உள்ளன.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு: இதற்கிடையில், “மகாத்மா காந்தி மற்றும் பகத் சிங் போன்ற முக்கிய தலைவர்களுடன் சாவர்க்கரின் படத்தையும் சேர்த்து பூரத்தில் சங்பரிவார் நிகழ்ச்சி நிரல் திணிக்கப்பட்டுள்ளது” என காங்கிரஸ் தலைவர் பத்மஜா வேணுகோபால் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், “சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த சாவர்க்கரை, மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், பகத்சிங், மறுமலர்ச்சித் தலைவர்களான மன்னத் பத்மநாபன், சட்டம்பி சுவாமிகள் ஆகியோருடன் சேர்த்துக் கொள்ள கேரள அரசு அனுமதி வழங்கியிருப்பது வெட்கக்கேடானது. இடதுசாரி அரசாங்கம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பரிவார் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்பட்டது” என முன்னாள் முதலமைச்சர் கே கருணாகரனின் மகளும் காங்கிரஸ் மூத்தத் தலைவரான பத்மஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஜக மௌனம்: நாட்டின் 75ஆவது சுதந்திர தின 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு வெளியிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலின் அடிப்படையில் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த விவகாரம் குறித்து பாஜக மற்றும் சங் பரிவாரங்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பூரம் குடைகளில் வீரசாவர்க்கர் படம் இடம்பெற்றிருப்பது கேரள அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: உலகப் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details