உத்தரப் பிரதேச மாநிலம் சிக்கந்தர்பூரைச் சேர்ந்த ஜவேத் என்பவர்சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில் செப்.25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அந்த வகையில் ஜவேத்தின் உடல் நேற்று(செப். 30) வாரணாசி விமான நிலையத்திற்கு வந்தது.
சவுதிவில் உயிரிழந்த உ.பி. இளைஞர்... வேறு உடலை அனுப்பிய அரசாங்கம்... - உத்தரப்பிரதேச மாநிலம்
சவுதியில் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜாவேத் அஹ்மத்தின் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அந்த உடல் ஜவேத் உடையாது அல்லா. வேறு யாரோ ஒருவருடையது. அதன்பின் மீண்டும் இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இதுகுறித்து சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இது சவூதி அரங்கத்தின் அலட்சியம் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் தாமதமின்றி உடலை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வலுக்கட்டாயமாக தடுப்பூசி; 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி