தமிழ்நாடு

tamil nadu

பிகாரில் என்ஜினில் இருந்து பிரிந்த பயணிகள் ரயில் பெட்டிகள்.. அடுத்து நடந்தது என்ன?

By

Published : Feb 3, 2023, 9:28 AM IST

பிகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த 5 பெட்டிகள், என்ஜினில் இருந்து பிரிந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பிகாரில் என்ஜினில் இருந்து பிரிந்த பயணிகள் ரயில் பெட்டிகள்.. அடுத்து நடந்தது என்ன?
பிகாரில் என்ஜினில் இருந்து பிரிந்த பயணிகள் ரயில் பெட்டிகள்.. அடுத்து நடந்தது என்ன?

பாட்னா: பீகார் மாநிலத்தின் ராக்சுவர் மாவட்டத்திலிருந்து டெல்லிக்கு சத்தியகிரகா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (பிப்.2) சென்று கொண்டிருந்தது. சரியாக 10 மணியளவில் முஷாரஃபூர் - நார்கட்டியாகஞ் இடையிலான ரயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் என்ஜின் ஆனது 5 பயணிகள் பெட்டிகளை விட்டுவிட்டுப் பயணிக்கத் தொடங்கியது.

இதனை உணர்ந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு மத்திய ரயில்வே துறை அலுவலர்கள், ரயிலில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்தனர். ரயில் பெட்டிகளை என்ஜின் உடன் இணைக்கும் பாகிகளில் ஏற்பட்ட பழுதால் இந்த சம்பவம் நடந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமடையவில்லை. முன்னதாக கடந்த 2022 டிசம்பரில், பீகாரின் தன்குப்பா ரயில் நிலையத்தில் வைத்து 3 சரக்கு ரயில் பெட்டிகள் என்ஜினில் இருந்து பிரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் 64 வயது அமெரிக்க மூதாட்டி பாலியல் வன்புணர்வு - 30 வயது இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details