டோக்கியோ (ஜப்பான்): உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் இணை, நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கோபயாஷி - ஹோக்கி இணையை 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இன்று தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை, மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் இக் இணையுடன் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றது.
இதனையடுத்து ஆடிய இரண்டாவது ஆட்டத்தின் முடிவில் 18-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. பின்னர் நடைபெற்ற மூன்றாவது செட்டில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 16-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.