தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் சாந்திஸ்ரீ - சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் துணை வேந்தராக சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Santishree Pandit
Santishree Pandit

By

Published : Feb 7, 2022, 4:58 PM IST

நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை மத்திய கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக செயல்பட்டுவந்த ஜகதீஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 59 வயதான சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராகிறார். இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் இவரே. தற்போது இவர் மகாராஷ்டிராவின் சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் பெலிட்டிகல் சயின்ஸ் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

அமெரிக்காவின் கர்லிபோனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், சென்னை அரசினர் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் எம்.பில். மற்றும் முனைவர் பட்டத்தை முடித்தார்.

கோவா பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு உள்ளிட்ட முன்னணி அமைப்புகளிலும் இவர் உறுப்பினராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க:சிவசங்கருடனான தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதத் தயார்- ஸ்வப்னா சுரேஷ்

ABOUT THE AUTHOR

...view details