புதுச்சேரி:உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் சாண்டா க்ளாஸ் வேடமணிந்து ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ: ஆழ்கடலில் இருந்து வாழ்த்து தெரிவித்த கிறிஸ்துமஸ் தாத்தா - சாண்டா கிளாஸ் வேடமணிந்து கொண்டாட்டம்
புதுச்சேரியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் டெம்பிள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வித்தியாசமான முறையில் கடலுக்கடியில் இருந்து வாழ்த்து தெரிவித்தார்.
![வீடியோ: ஆழ்கடலில் இருந்து வாழ்த்து தெரிவித்த கிறிஸ்துமஸ் தாத்தா Etv Bharatஆழ்கடலுக்கு அடியில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்த கிறிஸ்மஸ் தாத்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17305414-thumbnail-3x2-a.jpg)
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வருபவர் அரவிந்த். இவர் டெம்பிள் அட்வென்ச்சர் (Temple adventures) என்ற பெயரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் உட்பட 4 வீரர்கள் புதுச்சேரி காந்தி சிலையிலிருந்து கடலில் ஆறு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளனர். அங்கிருந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து 60 அடி ஆழத்திற்கு அரவிந்த் சென்றுள்ளார். அங்கிருந்து மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு