டெல்லி : மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ள சஞ்சய் சிங், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மலுயுத்த சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்த சஞ்சய் சிங்கிற்கும், காமல்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷெரோனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அண்மையில் நடந்த பாலியல் விவகாரம் காரணமாக தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது.
இந்நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் சஞ்சய் சிங் வெற்றி பெற்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் சிங், முன்னாள் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்கின் விசுவாசி எனக் கூறப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைமையகத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரம் பூதாகரம் அடைந்தது. இதையடுத்து அவர் பதவி விலக் கோரி இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.