தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவப்பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் சஞ்சய் ராவத்! - சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோதப்பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மருத்துவப்பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

ED office
ED office

By

Published : Aug 1, 2022, 3:48 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடியிருப்புப்பகுதியை மாற்றியமைப்பதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பான வழக்கில், சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் நேற்று(ஜூலை 31) கைது செய்தனர்.

6 மணி நேர விசாரணைக்குப் பிறகு சஞ்சய் ராவத் கைதானார். அவரது வீட்டில் 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதில் சுமார் 11 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று பகல் 12.30 மணியளவில், சஞ்சய் ராவத் மருத்துவப்பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். பரிசோதனைக்குப்பிறகு அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது - அமலாக்கத்துறை அதிரடி!


ABOUT THE AUTHOR

...view details