தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு - சஞ்சய் ராவத் வழக்கு

பத்ராசால் நில முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சஞ்சய் ராவத் வழக்கு
சஞ்சய் ராவத் வழக்கு

By

Published : Sep 16, 2022, 9:38 PM IST

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பத்ராசால் குடியிருப்புப் பகுதியை மாற்றியமைப்பதில் நிதி முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு மும்பையில் பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதனிடையே ராவத் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு சஞ்சய் ராவத் அரசியல் செல்வாக்கு மிக்க நபர் என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் ஆதாரங்களை சிதைக்கலாம், சாட்சிகளை அச்சுறுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி எம்ஜி தேஷ்பாண்டே செப்டம்பர் 19ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

ABOUT THE AUTHOR

...view details