ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் சென்ற காரின் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, மாணவர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் - ராகுல் காந்தி - ராகேஷ் டிக்கைட் மீது கல்வீச்சு
டெல்லி: விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தை கண்டித்துள்ள ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பின், பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வீச்சை கண்டித்துள்ள ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஆர்எஸ்எஸ் அமைப்பு, வன்முறையை கற்று தருகிறது. விவசாயிகளின் அகிம்சை வழி போராட்டம் அவர்களை அச்சப்படுத்துகிறது. விவசாயத்திற்கு, நாட்டிற்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்ப பெரும் வரை ஓய மாட்டோம்" என்றார்.