ஒடிசாவைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதைப் பாராட்டும் விதமாக அம்மாநில பூரி கடற்கரையில், நேற்றும் (ஆகஸ்ட்7), இன்றும் நீரஜ் சோப்ராவின் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.
தங்க மகன் நீரஜ்!
ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதால், நேற்று (ஆகஸ்ட். 7) ஒலிம்பிக் அரங்கில் நம் நாட்டின் தேசிய கீதம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலித்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியின் தடகளப்பிரிவில் முதல் தங்கப்பதக்கம் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ராவுக்கு மணல் சிற்பம் இதையும் படிங்க: TOKYO OLYMPICS: ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்... எத்தனை ஆண்டுகள் கனவு தெரியுமா...