தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிராக்டர் பேரணி ரத்து; ஆனாலும் விடமாட்டோம் - விடப்பிடியாய் நிற்கும் விவசாயிகள்! - பாரதீய கிசான் யூனினன்

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரே மசோதா மூலம் ரத்துசெய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் நாளை (நவம்பர் 29) நடத்த திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை விவசாய அமைப்பினர் ரத்துசெய்துள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி
விவசாயிகளின் டிராக்டர் பேரணி

By

Published : Nov 28, 2021, 12:18 PM IST

டெல்லி: ஓராண்டு காலமாக பஞ்சாப், ஹரியானா,நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் நடத்திய போராட்டத்தின் பலனாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.

எனினும் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை இயற்றி இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனப் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான நாளைக்கே (நவம்பர் 29) முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போராட்டத்தில் விவசாயிகள்

ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) மசோதா தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்பின்னர் அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கியவுடன் அந்தக் குறிப்பிட்ட சட்டம் முறைப்படி ரத்துசெய்யப்படும்.

இந்த மசோதாவைக் கூட்டத் தொடரின் முதல் நாளன்றே மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல்செய்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி

இதன் காரணமாக டெல்லியில் நாளை (நவம்பர் 29) நடத்த திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை விவசாய அமைப்பினர் ரத்துசெய்துள்ளனர்.

எங்களது போராட்டம் நிறுத்தப்படாது

தங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும், தெருவில் நிற்கும் 4000 விவசாயிகள் மீதான சட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோடி அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை தங்களது போராட்டம் நிறுத்தப்படாது என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

தங்களது போராட்டம் நிறுத்தப்படாது

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து விவசாயிகள் அமைப்புக் கூட்டம் நடக்கவுள்ளது என்றும் பாரதிய கிசான் யூனியன் கூறியுள்ளது.

இதையும் படிங்க: ஓலா, உபரில் பயணிப்பவரா? இனி உங்களுக்கும் ஜிஎஸ்டிதான் - புத்தாண்டில் புது சுமை!

ABOUT THE AUTHOR

...view details