தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கம்மை உறுதி - தமிழ்நாட்டில் குரங்கம்மை

கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்த இளைஞரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

samples-of-deceased-kerala-man-come-out-positive-for-monkeypox
samples-of-deceased-kerala-man-come-out-positive-for-monkeypox

By

Published : Aug 1, 2022, 1:19 PM IST

Updated : Aug 1, 2022, 5:16 PM IST

புனே:கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஜூலை 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பினார். அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டன. இதனால், திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது மாதிரிகள் ஜூலை 30ஆம் தேதி புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனிடையே நேற்று (ஜூலை 31) மருத்துவமனையிலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) அவரது மாதிரிகளில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பதிவாகிவருகிறது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு முதலாவதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எத்தியோப்பியாவிலிருந்து பெங்களூரு வந்தவருக்கு குரங்கம்மை இல்லை - கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Last Updated : Aug 1, 2022, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details