ஹைதராபாத்: நடிகை சமந்தா ரூத் பிரபு சிறிது காலம் படங்களில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்காக தனது திரைப் பணிகளை சற்று மூட்டைக்கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 15) சமந்தா தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 16), சமந்தா தனது உடல் நலனை குணப்படுத்தும் பயணத்தைப் (healing journey) பற்றி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் ஸ்டோரியாக (Instagram Stories) பதிவிட்டுள்ளார். மேலும், சமந்தா தற்போது கோயம்புத்தூரில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமந்தா ஈஷா அறக்கட்டளையின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, வெள்ளை நிற இதய ஈமோஜியோடு "மகிழ்ச்சியான இடம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், ஆன்மிக அமைப்பை டேக் (geotagged the spiritual organisation) செய்துள்ளார். ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான ஆன்மிகவாதியுமான சத்குருவின் அபிமானியானவர், நடிகை சமந்தா. அவர் அடிக்கடி ஈஷா அறக்கட்டளை நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் சமூக ஊடகங்களில் சத்குருவின் தத்துவப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.