தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மான் வேட்டையாடிய வழக்கு: நேரில் ஆஜராக மறுக்கும் சல்மான் - Bollywood actor Salman Khan

ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கு தொடர்பாக சல்மான்கான் பதினைந்தாவது தடவையாக நீதிமன்றம் முன்பு ஆஜராக மறுத்துள்ளார்.

salman
salman

By

Published : Dec 1, 2020, 5:08 PM IST

பாலிவுட்டில் 1998ஆம் ஆண்டு வெளியான 'ஹம் சாத் சாத் ஹைன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, ​​நடிகர் சல்மான்கான் ஜோத்பூரின் கங்கனி கிராமத்தில் மான் வேட்டையாடினார்.

இது தொடர்பாக சல்மான்கான் மீது வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெறுகிறது. தற்போது இவ்வழக்கு ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் சல்மான் கான் கடந்த இரண்டரை வருடங்களாக இந்தவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார்.

இந்தமுறை அவர் ஆஜராக தவறியதற்கு ஜோத்பூரில் கோவிட் -19 பாதிப்பு அதிகமாக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என சல்மான் கான் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்தவழக்கு தொடர்பாக சல்மான் கான் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறி வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details