தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Salman Khan gets bitten by snake: நாளை பிறந்த நாள் கொண்டாடயிருந்த நிலையில், பாம்பு கடிக்கு ஆளான நடிகர் சல்மான் கான்! - சல்மான் கான் பிறந்தநாள்

Salman Khan gets bitten by snake: பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கான் மகாராஷ்டிராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது பாம்பு ஒன்று அவரைக் கடித்தது. இந்தநிலையில் சிகிச்சைக்காக நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சல்மான் கான் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் சல்மான் கான்
நடிகர் சல்மான் கான்

By

Published : Dec 26, 2021, 3:16 PM IST

ராய்காட் (மகாராஷ்டிரா):Salman Khan gets bitten by snake:பாலிவுட் மெகா ஸ்டாராக வலம் வருபவர், சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போன்று, இந்தி பிக் பாஸ் 15ஆவது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் அலியா பட், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் குழுவினருடன் சனிக்கிழமையன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினார்.

பண்ணைவீட்டில் நிகழ்ந்த விபரீதம்

இந்தநிலையில் இன்று அதிகாலை(டிச.26) ராய்காட் மாவட்டத்தில் நவி மும்பைக்கு அருகில் உள்ள பன்வேல் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்தபோது, பாம்பு ஒன்று அவரைக் கடித்தது.

இதையடுத்து சல்மான் கானை மீட்டு அவரது பாதுகாப்பு காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் விஷ முறிவு சிகிச்சை அளித்தபின் சிறிது நேரத்திற்குப் பின் சல்மான் கான் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வனத்துடன் நெருக்கமாக வாழும் சல்மான்கான்

சல்மான் கானை கடித்த பாம்பு விஷமற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பண்ணை வீடு பசுமையான, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது என்றும்; விடுமுறை நாட்களை இங்கு தான் சல்மான் கான் குடும்பத்தினருடம் செலவிடுவார் எனவும் அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.

சல்மான் கானுக்கு நாளை (டிச.27) பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவரை பாம்பு கடித்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புஷ்பா வெற்றியையடுத்து விரைவில் நடிகர் அவதாரம்? மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

ABOUT THE AUTHOR

...view details