தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சொகுசு ஹோட்டலில் ஹரித்வார் துறவிகள்- வைரலாகும் புகைப்படங்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

ஹரித்வார் கோயில்களுக்கு சர்தாம் யாத்திரிகை செல்லும் சாமியார்கள் சிலர் ஹரித்வாரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

சொகுசு ஹோட்டலில் ஹரித்வார் துறவிகள்- வைரலாகும் புகைப்படங்கள்
சொகுசு ஹோட்டலில் ஹரித்வார் துறவிகள்- வைரலாகும் புகைப்படங்கள்

By

Published : May 14, 2022, 11:14 AM IST

ஹரித்வார்(உத்தரகாண்ட்): துறவி என்பதற்கு முற்றும் துறந்தவன் என்று பொருள், இதன்படி அனைத்து துறவிகளும் முற்றும் துறந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஹரித்வாரில் சர்தாம் யாத்திரை செல்லும் துறவிகள் சிலர் சொகுசு ஹோட்டலில் தங்குவதும், அங்கு விலை உயர்ந்த உணவுகளை உண்பதும் என துறவிற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

துறவிகள் சார்பில் சர்தாம் யாத்திரை வெற்றிகரமாக முடிந்தது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில பாரதிய அகாரா பரிஷத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் ஹரித்வாரில் உள்ள சங்கர் ஆசிரமத்தின் ஹோட்டல் கிளாசிக் ரெசிடென்சியில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொகுசு ஹோட்டலில் ஹரித்வார் துறவிகள்

கூட்டத்தில் அகில இந்திய அகாரா பரிஷத் தலைவரும், ஸ்ரீ பஞ்சாயத்து அகாரா மஹாநிர்வாணி செயலாளருமான மஹந்த் ரவீந்திரபுரி மகராஜ் கலந்து கொண்டு பேசினார். அகாரா பரிஷத்தின் பொதுச் செயலாளர், ஸ்ரீ மஹந்த் ராஜேந்திரதாஸ் மகராஜ்ஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் எவ்வாறு பரப்பலாம் என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இதையும் படிங்க:'சார்தாம் யாத்திரை' பக்தர்கள் கவலை: கேதார்நாத்தில் பனிப்பொழிவு, மழை!

ABOUT THE AUTHOR

...view details