சண்டிகர்:2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சிரோமணி அகாலி தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை இறுதிசெய்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சிரோமணி அகாலி தளத்தின் செயலாளர் சுக்பீர் சிங், இது பஞ்சாப்பின் அரசியலில் புதிய நாள் என்று கூறியுள்ளார்.
மேலும், "சிரோமணி அகாலி தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து 202்2 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும், வருங்காலங்களிலும் இக்கூட்டணி தொடரும். அகாலி தளம் பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளில் 97 தொகுதிகளில் போட்டியிடும். பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களில் போட்டியிடும்" என குறிப்பிட்டுள்ளார்.