திருவனந்தபுரம்:கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி இன்று பம்பையை வந்தடைகிறது. தங்க அங்கியால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை மண்டல பூஜை நடைபெற்றது.
தங்க அங்கியுடன் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு, மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்படும். பின்னர், 8.30 மணிக்கு நடைபெறும் பூஜைக்குப் பிறகு, ஹரிவராசனம் பாடிய பின்னர் இரவு 9 மணிக்கு கோயில் மூடப்படும்.