கேரளா: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை நாளை(டிச.27) நிறைவடைகிறது. அதன்பின் கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகர விளக்குப் பூஜைக்காக வரும் டிச.30ஆம் தேதி நடை திறக்கப்படும். இந்நிலையில் கார்த்திகை 1 முதல் மார்கழி 9 வரை அதாவது 39 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் விவரங்களை தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரஷாந்த் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 39 நாட்களில் ஐயப்பன் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.204.30 கோடி ரொக்கப் பணமாகக் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அரவனை பாயாச விற்பனையில் ரூ.96.32 கோடி, அப்பம் விற்பனையில் ரூ.12.38 கோடி கிடைத்துள்ளது என்று கூறினார். இதுவரை சபரிமலையில் 31 லட்சத்து 43 ஆயிரத்து 163 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் எனவும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 49 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சபரிமலையில் மண்டல பூஜை நாளை(டிச.27) நிறைவடைவதால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு நாளும் சபரிமலையில் கூட்டம் அலைமோதுவதால், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றத்தில் தேவசம் போர்டு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.