தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுற்றுச்சூழல் தூதராக நியமிக்கப்பட்டார் சாளுமரதா திம்மக்கா! - பசவராஜ் பொம்மை

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சாளுமரதா திம்மக்காவிற்கு சுற்றுச்சூழல் தூதர் என்ற சிறப்புப் பட்டத்தை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் தூதராக நியமிக்கப்பட்டார் சாளுமரதா திம்மக்கா!
சுற்றுச்சூழல் தூதராக நியமிக்கப்பட்டார் சாளுமரதா திம்மக்கா!

By

Published : Jul 8, 2022, 9:47 PM IST

பெங்களூரு (கர்நாடகா): கடந்த ஜூன் 30 ஆம் தேதி அம்பேத்கர் பவனில் நடைபெற்ற சாளுமரதா திம்மக்காவின் 111 வது பிறந்தநாள் விழா மற்றும் பசுமை விருது வழங்கும் விழாவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். அதில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சாளுமரதா திம்மக்காவின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவருக்கு மாநில அரசு சார்பில் ‘சுற்றுச்சூழல் தூதர்’ என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்படும்” என அறிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் தூதராக சாளுமரதா திம்மக்கா நியமிக்கப்பட்டு, அவருக்கு மாநில அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தண்டவாளத்தில் சிக்கிய லாரி - அடுத்து நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details