தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

டெல்லி: ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ், இரண்டு நாள் பயணமாக இன்று (ஏப்ரல்.05) இந்தியா வருகிறார்.

Sergey Lavrov
செர்கே

By

Published : Apr 5, 2021, 10:23 AM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (ஏப்.04) ஒரே நாளில் ஒரு லட்சத்து மூன்றாயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இன்று (ஏப்.05) இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர், பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்கும், பிராந்திய, சர்வதேசப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே போல, ரஷ்யாவில் தயாராகும் ’ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:22 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மணல் சிற்பத்தில் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details