தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ், டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

By

Published : Apr 1, 2022, 11:29 AM IST

உக்ரைன்- ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போருக்கு பிறகு முதல்முறையாக இந்தியா-ரஷ்யா இடையே ஆலோசனை நடைபெறவுள்ளது.

அதன்படி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது உக்ரைன்-ரஷ்யா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் நிலை குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில், எந்த பண மதிப்பில் இருநாடுகளும் வர்த்தகம் செய்யும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் நேற்று இந்தியா வந்தார். அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். லிஸ் ட்ரஸ் உடனான பேச்சுவார்த்தை இன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வருகையால், நேற்றே நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details