தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"உக்ரைன் பக்முத் நகரை கைப்பற்றிவிட்டோம்" - ரஷ்யாவின் வாக்னர் குழு தகவல்! - பக்முத் நகரை கைப்பற்றிய வாக்னர் குழு

உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்யாவின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

etv Bharat
etv Bharat

By

Published : Apr 3, 2023, 8:21 AM IST

மாஸ்கோ : உக்ரைன் பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்யாவின் கூலிப்படை அமைப்பு வாக்னர் குழு தெரிவித்து உள்ள நிலையில், அதை உக்ரைன் அரசு மறுத்து உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்தன.

மேலும் அப்பாவி மக்கள் பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர். உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரிடியாகவும், மறைமுகமாகவும் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவின் போரால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

இந்த போரில் ரஷ்யாவுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கிலான ரஷ்ய வீரர்கள் இந்த போரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உருக்குலைந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் தளவாடங்கள் கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு உதவியதாக தகவல்கள் வெளியாகின. ஈரான் கொடுத்த அதிநவீன ட்ரோன்களை கொண்டு உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த ராணுவ தளவாடங்களை ரஷ்யா அழித்ததாக செய்திகள் வெளியாகின. இதனிடையே உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றம் புரிவதாக கூறி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றம் புரிவதாக சர்வதேச நிதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. உக்ரைனில் இருந்து குழந்தைகளை அதிபர் புதின் கடத்தியதாக நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹாக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் நல ஆணையர் மரிய அலெக்ஸீவ்னா லவோவா- பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பத்தினர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவத்தின் கூலிப் படை அமைப்பான வாக்னர் தெரிவித்து உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான தொழிலதிபர் யெவ்ஜெனி பிரிகோசன் (Yevgeny Prigozhin ) தொடங்கிய கூலிப் படை அமைப்புதான் வாக்னர்.

ரஷ்ய அதிபருக்கு நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட காரணத்திற்காக யெவ்ஜெனி பிரிகோசன் மீது உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்தன. ரஷ்ய ராணுவத்திற்கு துணையாக வாக்னர் கூலிப் படை அமைப்பும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.

போரில் ரஷ்ய ராணுவத்திற்கு ஏற்பட்டது போல் வாக்னர் அமைப்பிலும் வீரர்கள் பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், புதிதாக 30 ஆயிரம் வீரர்களை படையில் சேர்க்க உள்ளதாக யெவ்ஜெனி பிரிகோசன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக வாக்னர் கூலிப் படை குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசன் தெரிவித்து உள்ளார்.

தன் டெலிகிராம் பக்கத்தில் பக்முத் நகர நிர்வாக கட்டடத்தின் முன் நிற்பதாகவும், அந்த கட்டடத்தின் மீது ரஷ்யக் கொடி பறக்க விடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அதேநேரம் இந்த தகவலுக்கு உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க :கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு! பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ABOUT THE AUTHOR

...view details